தன்னை நிராகரித்த நடிகருக்கு சரியான பதிலடி கொடுத்த வாணி போஜன்.!

0
vaani-bhojan
vaani-bhojan

தற்பொழுதெல்லாம் சின்னத்திரையிலிருந்து வெள்ளிக்திரைக்கு அறிமுகமாகும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர்,வாணி போஜன் போன்ற பல நடிகைகள் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இவர்களுக்கு வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.அந்த வகையில் வாணி போஜன் இந்த வருடத்தில் மட்டுமே சுமார் ஏழு திரைப்படங்களின் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார் ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை தராத காரணத்தினால் அசோக் செல்வன் உடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு வெற்றியைப் பெற்று தந்தது இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வந்துள்ள பல நடிகர்கள் நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு சின்ன நட்சத்திரமாக இருந்து வருகின்றனர்.

அதேபோல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் நானும் ஒருவர். ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து வந்ததால் என்னை சில நடிகர்கள் வேண்டாம் என நிராகரித்தார்கள் மேலும் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி அதற்கான அக்ரீமெண்ட் வேலைகள் முடிந்த பிறகும் என்னை வேண்டாம் என நீக்கி விட்டார்கள்.

இவ்வாறு பல தடைகளை தாண்டி தற்பொழுது நான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறேன் அப்பொழுது என்னை நிராகரித்த நடிகர்களின் படங்களை நடிப்பதற்கு தற்பொழுது என்னை வாய்ப்பு கேட்டுள்ளார்கள் ஆனால் நான் இப்பொழுது அவர்களை நிராகரித்து வருகிறேன் என்ன பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.