ஒரு கையில் பிள்ளையார் ஒரு கையில் பெரியார் மிரட்டலாக வெளியானது பாலாவின் வணங்கான் பட போஸ்டர்.?

Vanangaan Movie Poster : தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பாலா. இவர்  சேது, பிதாமகன்,  பரதேசி, அவன் இவன் போன்ற படங்களை தொடர்ந்து பாலா இயக்கி வரும் திரைப்படம் வணங்கான். முதலில் சூர்யா இந்த படத்தில் ஹீரோவாக கமிட்டானதோடு மட்டுமல்லாமல் தயாரிக்கவும் முடிவு செய்தார்.

ஆனால்  படப்பிடிப்பின் பொழுது பாலா – சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட சூர்யா இந்த படத்தில் இருந்து மொத்தமாக விலகினார் ஆனால் இந்த கதையை பாலா கை விடுவது போல இல்லை உடனே சூர்யாவுக்கு பதில் அருண் விஜயை படத்தில் ஹீரோவாக கமிட் செய்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக்கியினார்.

அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பி  ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்து வருகிறார் படத்தின் பெரும்பாலான சூட்டிங் கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் தான் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது .  அதில்  அருண் விஜய் உடல் முழுக்க சகதியை பூசிக்கொண்டு இருக்கிறார்.  வலது கையில் பெரியார் சிலையும் இடது கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார்.

அந்த போஸ்டர் இணையதள பக்கத்தில் தற்பொழுது படும் பைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பாலாவின் மற்றொரு மாறுபட்ட திரைப்படத்தைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதனால் வணங்கான்  படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது அதிகரிக்க வைத்துள்ளது இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

Vanangaan
Vanangaan