செகண்ட் லுக் போஸ்டர் என்ற பெயரில் படையப்பா பட போஸ்டரை அப்படியே வெளியிட்ட வம்சி..! இதற்குப் பெயர்தான் ஈ அடிச்சான் காப்பியா..?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் பிரபல கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது நல்ல வசூலைப் பெற்றாலும் பெருமளவு விமர்சனத்தை பெற்றது என்று சொல்லலாம் அந்த வகையில் இந்த திரைப்படம் வெளிவந்த போது பல்வேறு ரசிகர்களும் பார்த்த நிலையில் நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் பெருமளவு ரசிகர்களை கவராத ஒரே காரணத்தினால் தற்பொழுது தளபதி விஜய் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு பெயர் வாரிசு என வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இருந்து எடுக்கப்பட்ட பேக்ரவுண்ட் இமேஜ் என தெரிய வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட புகைப்படத்தை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செகண்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய் அவர்கள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு வாகனத்தில் செல்லும் படி அமைந்துள்ளது இதே போன்ற காட்சி ஏற்கனவே  படையப்பா படத்தில் ரஜினி செய்திருப்பார் ஆகையால் இதுவும் காப்பியா என ரசிகர்கள் வம்சி கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment