படும் ஸ்லிம்மாகவும் மாடலாகவும் மாறிய வம்சம் சீரியல் நடிகை.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பு..

0
bhoomika-vamsam-serial
bhoomika-vamsam-serial

vamsam serial actress bhomika : சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல் சீரியலுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதுவும் சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருவதால் புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் வம்சம் சீரியலில் நடித்த பூமிகாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, இவர் முழு பெயர் சந்தியா ஜகர்லமுடி இவர் 1985 ஆம் ஆண்டு 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர். சந்தியா தனது பள்ளிப்படிப்பை செயின்ட் ஜோசப் பள்ளியில் முடித்தார் அதன் பிறகு BA ஆங்கிலம் MSC  உளவியல் ஆகிய முதுகலை படிப்பை படித்து முடித்தார்.

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சந்தியா முதன்முதலில் சின்னத்திரைக்கு அறிமுகமானார் அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்து இருந்தார் அந்த சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பப்பட்ட வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வம்சம் சீரியலில் மலைவாழ் மக்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் பூமிகா.

vamsam bhoomika
vamsam bhoomika

இவரின் சொந்த ஊர் ஹைதராபாத் ஆனால் சீரியலில் தொடர்ந்து நடித்து வருவதால் சென்னையிலேயே செட்டிலானார் மேலும் தெலுங்கிலும் சில சினிமாவில் நடித்துள்ளார் நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதால் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.

இவர் சீரியலில் நடிக்கும் பொழுது மிகவும் கொழுக் மொழுக் என்று இருந்தார் அந்த வகையில் தற்போது இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் வியந்து இப்படி ஒல்லியாக இருப்பது வம்சம் பூமிகாவா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

vamsam bhoomika
vamsam bhoomika