மீண்டும் போலீஸ் வேடத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.! வெளியானது வள்ளி மயில் பட டீசர்..

valli mayil : தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களின் திரைப்படங்களை விரும்பி பார்ப்பார்கள் அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்து வந்தது இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது வள்ளி மயில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து சத்யராஜ் தம்பி ராமையா அப்துல்லா, பாரதிராஜா, மனோஜ், பாரதிராஜா, சுனில், ரெடின் கிங்ஸ்லீ,  ஜி பி முத்து, அறந்தாங்கி நிஷா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் படத்துக்கு டி  இமான் தான் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதற்கு காரணம் தற்போது வெளியாகி உள்ள டீசர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த டீசரில் ஆரம்பத்தில் சத்யராஜ் ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு போலீசாரால் அரெஸ்ட் செய்யப்பட்டு வண்டியில் செல்கிறார் விஜய் ஆண்டனி கையில் துப்பாக்கியுடன் சண்டை போடுகிறார் அதுமட்டுமில்லாமல் கடைசியாக விஜய் ஆண்டனி போலீஸ் கெட்டப்பில் மிரட்டுகிறார்.