மாஸ்டர் படத்தின் வசூலை முக்கிய இடத்தில் ஓவர்டேக் செய்த வலிமை.? கெத்து காட்டும் அஜீத்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, புகழ், யோகி பாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இரண்டு வருடங்களுக்கு மேல் கழித்து தான் வெளிவந்தது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போல ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இருந்ததால் ரசிகர்களை சந்தோஷ படுத்தி அதை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் இந்த திரைப்படத்தை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர். இதனால் இந்தத் திரைப்படமும் இன்று வரையிலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் வசூலிலும் அடித்து நொறுக்கிறது. இதனால் வலிமை படக்குழு உற்சாகத்தில் இருக்கிறாராம். வலிமையை படம் வசூல் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு டாப் நடிகர்கள் படங்களின் வசூலையும் அஜித்தின் முந்தைய படங்களின் வசூலையும் ஒரு இடத்தை முன்னேறி உள்ளது. இரண்டு வாரத்தில் 200 கோடியைத் தொட்ட வலிமை திரைப்படம் அடுத்த வாரத்திலும் மக்களின் ஆதரவு கொடுத்து வருவதால் வசூல் அடித்துக்கொண்டு வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலையும் ஓவர்டேக் செய்துள்ளது எங்கு தெரியுமா வெளிநாடுகளில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி சுமார் 46 கோடியை அள்ளிய நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 50 கோடியை தொட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர், சவுதி, யுஎஸ்ஏ போன்ற முக்கிய இடங்களில் அஜித் படத்தின் வசூல் இன்றும் ஜோராக நடைபெற்று வருவதால் இன்னும் பல்வேறு நடிகர்களை உடைத்தெறிந்து நல்லதொரு இடத்தைப் பிடிக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment