வலிமை திரைப்படத்தில் இணைந்த வில்லன் நடிகர்.! ஒருவேளை இவர் தான் வில்லனோ.?

தமிழ் சினிமாவில் தல அஜித் வசூல் மன்னனாகவும்  முன்னணி நடிகராகவும் வலம் வருபவர்.இவர் நேற்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, அதுமட்டுமல்லாமல் பைக்ரேஸ் காட்சிகளும், கார்ரேஸ் காட்சிகளும் இடம் பெறும் எனவும் கூறுகிறார்கள்.இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் 100 திரைப் படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பா இணைந்துள்ளார். இவன் ஒருவேளை வில்லன் வேடத்தில் தான் நடிக்கப் போகிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

ஆனால் இவர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் இவர் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Leave a Comment