மிரட்டலாக வெளியானது வலிமை திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ.! பைக்கில் மின்னல் வேகத்தில் பறக்கும் தல அஜித்

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது இந்த திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் அவர்கள்தான் வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 1 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் படத்தை தவிர படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

நீண்ட காலமாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணியாற்றும் பிரபலங்களை நச்சரித்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் தேவையில்லாத இடத்தில் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்ததால் அஜித் அவர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார் அதனால் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வெளியாகும் என கூறியிருந்தார் அஜித்.

அந்த வகையில் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் குர்ஆனோ பிரச்சனை காரணமாக அப்டேட் வெளியாகாமல் தள்ளிப்போனது இதனைத் தொடர்ந்து படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை மாதம் வெளியானது அதுமட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் பலரும் ட்ரைலர் எப்போது வரும் என காத்துக் கொண்டிருந்த நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு டிரைலர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது மேலும் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

அப்படி இருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது இந்த காட்சியில் அஜித் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறார். இந்த திரைப்படம் ஒரு அதிரடி சண்டை திரைப்படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதோ அந்த முன்னோட்ட காட்சி.

Leave a Comment