நான் ஜெயிச்சேன் வலிமை அப்டேட் வந்துவிட்டது.! அதிரடியாக பிரபலம் போட்ட ட்வீட்.!

0

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது அதுமட்டுமில்லாமல் அஜித்திற்கு உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதனால் அஜித் என்ன செய்தாலும் அது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது.

இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளார்கள் இந்த நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் வகையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியாகும் என அறிவித்த உடன் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் வலிமை திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானதும் கொண்டாடும் விதமாக சமூகவலைதளத்தில் ஹேஸ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இந்த அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படி அமைந்துள்ளது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அப்டேட் குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர் அந்த பதிவில் கூறியதாவது நான் வெற்றி பெற்றவுடன் வலிமை படத்தின் அப்டேட் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

மேலும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.