வலிமை அதிரடி அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்.! சரவெடியாக வெடிக்கும் ரசிகர்கள்

தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஒரு நடிகர் என்றால் அவர் தல அஜித் குமார் தான். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தமிழகம் முழுவதிலும்  அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியில் சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து வலிமை படத்தின் இயக்குனரான எச்.வினோத்  இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது என்ற தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ajith

இருப்பினும் வலிமை படத்தின் படப்பிடிப்பை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். மேலும் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்  இப்படம் குறித்து பேசியுள்ளார் அது என்னவென்றால் வருகின்ற பிப்ரவரி 15 முதல் வலிமை படபிடிப்பு முடிய உள்ளது என்றும் அதில் உள்ள ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படம் எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது என்றும் வலிமை படத்தின் வெளியீட்டை இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version