வலிமை டைட்டிலை யார் கொடுத்தது தெரியுமா.? அதற்கு அஜித் என்ன செய்தார் தெரியுமா.?

0
valimai police
valimai police

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது பூஜையில் படைப்பில் அனைவரும் கலந்து கொண்டார்கள், தல அஜித் சமீபகாலமாக வி என்ற தலைப்பில்தான் வைக்க ஆசைப்படுகிறார் அதற்கேற்றார் போல் வலிமை என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார்கள்.

இதற்கு முன் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் எனத் தொடர்ந்து வி டைட்டிலில் தான் நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது வலிமை டைட்டில் கிடைத்துள்ளது அஜித்திற்கு, ஆனால் இந்த டைட்டிலை ஏற்கனவே ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட வினோத் நேராக கென்யா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜெயக்குமார் இடம் இந்த டைட்டில் அஜித் திரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுள்ளார், ஜே ஜெயகுமார் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் இந்த டைட்டிலை முழு சம்மதத்துடன் உடனே கொடுத்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அஜித் அவர்கள் ஜெயகுமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது நன்றியை கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஜெயகுமார் அவர்கள் நான் யாரை தல என அன்போடு ரசித்தேனா அவரே போன் செய்து பேசியது மிக்க மகிழ்ச்சி என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.