வலிமை தீம் மியூசிக் பற்றியும் விஜய் பற்றிய கேள்விக்கும் ஒரே வார்த்தையில் பதில் அளித்த யுவன் சங்கர் ராஜா.! தீபோல இருக்கா…

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை ஞானி இளையராஜாவின் மகனாவர், இன்றைய இளசுகளின் மத்தியில் இசையில் வல்லவராக இருப்பவர். அதேபோல் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் அவற்றில் பல பாடல்கள் ஹிட் அடைந்துள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல நடிகர் மற்றும் நடிகைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பு நடைபெறவில்லை, இந்த நிலையில் பிரபலங்களை நேரில் சென்று பேட்டி எடுக்க முடியவில்லை அதனால் வீடியோ மூலம் தான் பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் தங்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக சமூக வலைத்தளத்தில் லைவ் சாட் செய்து வருகிறார்கள், அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் லைவ் வந்துள்ளார். அப்பொழுது பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டுள்ளார்கள் அதற்கு யுவன்சங்கர்ராஜா பதில் அளித்துள்ளார்.

முதலில் ரசிகர் ஒருவர் இந்த ஊரடங்கு ஓய்வு எப்படி செல்கிறது என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா வீட்டை சுத்தம் செய்வது மனைவிக்கு உதவி செய்வது சமையல் செய்வது தன்னுடைய செல்ல மகளுடன் விளையாடுவது என மகிழ்ச்சியாக செல்கிறது என கூறியுள்ளார்.

அஜித் பற்றியும் விஜய் பற்றியும் ஒரு வார்த்தையில் சொன்னால் எப்படி சொல்வீர்கள் என கேட்டுள்ளார்கள் அதற்கு யுவன் சங்கர் ராஜா அஜித் நம்ம தல எனவும் விஜய் தன்னை கவர்ந்த மனிதர் எனவும் பதிலளித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் தனக்கு பிடித்தது மீன் எனவும் சென்னையில் தான் விரும்பி செல்லும் இடம் என்றால் பீச் எனவும் கூறியுள்ளார்.

valimai-tamil360newz
valimai-tamil360newz

அஜித்தின் வலிமை படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த யுவன் வலிமை இசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது மேலும் பின்னணி இசையில் கவனம் செலுத்தி வருகிறேன் எனவும் கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் ஊரடங்கு காரணமாக பணி சற்று மெதுவாக செல்கிறது எனவும் இசை தீ போல் உருவாகியுள்ளது எனவும் இமேஜ்களை பதிவிட்டு கூறியுள்ளார்.

Leave a Comment