வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.! ரிலீஸ் பற்றி ரசிகர்கள் ஆர்வம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்குபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.நடிகர் அஜித் குமார் sportsலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வலிமை படத்தை வினோத் அவர்கள் இயக்கி உள்ளனர். இந்த திரைப்படத்தில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் அஜித் குமார் மற்றும் ஹீமா குரேஷி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் படமாக்கப்பட்டது. அத்துடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

valimai
valimai

வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும் ஏற்கனவே நடந்து ஏறக்குறைய பாதி முடிந்ததாக கூறப்படுகிறது. தற்போது எடுத்து முடிக்கப்பட்டு ரஷ்ய கட்சிகளின் பணிகளும் விரைவில் முடிக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் உள்ள ‘நாங்க வேற மாறி’ என்ற பாடல் வெளியாகி 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று  ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. மற்ற பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வலிமை படம் அக்டோபர் மாதம் நவராத்திரி விடுமுறையில் வெளியாகுமா அல்லது தீபாவளியை முன்னிட்டு வெளியாகுமா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் வெளியீடு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடலாம் என இதிலிருந்து தெரியவருகிறது.

Leave a Comment