வலிமை ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவித்த போனிகபூர்..! மீண்டும் களத்தில் மோதும் ரஜினி அஜித்

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாமல் வசூல் மன்னனாக வலம் வருபவர் இவர் தற்போது நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தல-60 திரைப்படமாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை போனிகபூரின் ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறார் அதுமட்டுமல்லாமல் படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார், கடந்த அக்டோபர் மாதம் இந்த திரைப்படத்தின் பூஜை போடப்பட்டது அதுமட்டும் இல்லாமல் நவம்பர் 14ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ‌. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய தகவல்களை ரகசியமாக காத்து வருகிறது படக்குழு. சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்து கொண்ட திரை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

படத்தைப் பற்றி பேசினார் அவர் கூறியதாவது படத்தில் எமோஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தார். ஏற்கனவே கடந்த வருடம் ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ரஜினியின் திரைப்படமும் வலிமை திரைப்படமும் மோத இருக்கின்றன என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளன.

ஏனென்றால் ரஜினி சிவா இயக்கத்தில் நடித்து வரும் தலைவர் 168 திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

Leave a Comment