ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய அஜித்.! வலிமை சீக்ரெட்டை போட்டுடைத்த தயாரிப்பாளர் போனி கபூர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். தற்பொழுது அவர் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சமீபத்தில் ஷூட்டிங் நடைபெற்றபோது பைக் காட்சியிலிருந்து அஜித் அவர்கள் தடுமாறிக் கீழே விழுந்தது விபத்துக்கு உள்ளானர். இதனால் இப்படத்தின் ஷூட்டிங் சற்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் மற்றும் எச். வினோத் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன்பு அஜித்தை வைத்து பிங்க் ரீமேக்காக எடுக்கப்பட்ட நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்தவர் . இப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது ரசிகர்களையும் மற்றும் பெண் ரசிகைகளை பெருமளவில் கவர்ந்த படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் வலிமை படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போனி கபூர் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியது அஜித் தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தபோது நட்பு ஏற்பட்டது அவர் மூலம்தான் எனக்கு அஜித் அறிமுகமானார் நாளடைவில் நல்ல குடும்ப நண்பர்களாக மாறி விட்டார் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் பேசிய போனிகபூர் அவர்கள் வலிமை படத்தில் அஜித் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த படத்தில் பல ஆக்ஷன் மற்றும் ரேஸிங் காட்சிகள் இடம்  பெற்றுள்ளதாகவும் போனிகபூர் அவர்கள் தெரிவித்துள்ளார் இதனைத்தொடர்ந்து அஜித்தை வைத்து பல படங்கள் தயாரிக்கும் எண்ணம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

ரசிகர்கள் விரும்பியது போல் படத்தில் பைக் ரேஸ் கார் ரேஸ் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் படத்தை பார்க்க.

Leave a Comment