வலிமை புதிய மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு.! வைரலாகும் புகைப்படங்கள்.

0

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் அப்டேட்டிற்க்காக  ரசிகர்கள் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் தல அஜித்தின் திரைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்  இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை திரைப்படத்தையும் வினோத் தான் இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் வலிமை திரைப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் வலிமை திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்  சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் அஜித்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதால் அதனை வெளிப்படுத்தும் விதமாக அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கொண்ட வைத்துள்ளது.