மிரட்டலான வலிமை இசை.! எத்தனை பாடல் முடிந்துள்ளது.? எத்தனை தீம் மியூசிக்.? யுவன் சங்கர் ராஜா கொடுத்த பரபரப்பு அப்டேட்.

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார்.

படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தயாரித்து வருகிறார், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார், மேலும் அஜித் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது.

மேலும் வலிமை திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் கார் சேசிங் காட்சிகளும் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் இந்த காட்சிகளை அனைத்தையும் டெல்லியில் எடுக்க படக்குழு திட்டமிட்டது ஆனால் அங்கு தற்பொழுது உள்ள சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதனால் அந்த காட்சிகளை எங்கு எடுக்கலாம் என படக்குழு ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை பற்றி முதன் முறையாக பேட்டியில் பேசியுள்ளார் யுவன்சங்கர்ராஜா அவர் பேசியதாவது இந்த திரைப்படத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டார் பயன்படுத்தாமல் ஒரு தீம் மியூசிக் போட்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இதுவரை வலிமை திரைப்படத்திற்காக 3 பாடல்களை முடித்து விட்டதாகவும் ஒரு தீம் மியூசிக்கை முடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தீம் மியூசிக்கை ரிலீஸ் செய்யுங்கள் என நச்சரித்து வருகிறார்கள் ரசிகர்கள்.ஏனென்றால் வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் ஏதாவது அப்டேட் வெளியிடுங்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment