சைலண்டாக அப்டேட்டை கூறி சரவெடி போல் வெடிக்கவைத்த வலிமை பட வில்லன்.!

வெள்ளித்திரையில் முடியாது என்பது மூடநம்பிக்கை முடியுமா என்பது அவ நம்பிக்கை முடியும் என்பது தன்னம்பிக்கை என்ற பொன் மொழிக்கேற்ப விளங்கி வருபவர் தல அஜித்.

இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை இயக்குனர் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தல அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் உதவி செய்வார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனையடுத்து வலிமை திரைப்படத்தை பற்றி எப்பொழுது அப்டேட் வெளியிடுவீர்கள் என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் அதற்கு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மே1 வலிமை படத்தின் அப்டேட் உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்களுக்கு வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து  இந்த திரைப்படத்தை பற்றி இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திக்கேயா ஒரு பேட்டியில் ஒன்று கூறியுள்ளார் அதில் நான் சந்தித்த திலேயே மிகவும் எளிமையானவர் என்றால் அது தல அஜித் தான் வலிமை திரைப்படத்தில் நடிக்குவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது எனவும் இந்த திரைப்படத்தின் ஜேசிங் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படம்பிடிக்க உள்ளதாக அதில் கூறியிருந்தாராம்.

மேலும் இந்த காட்சி மட்டும் எடுக்க பட்டது என்றால் வலிமை திரைப்படமே முடிந்து விட்டது எனவும் அந்த பேட்டியில் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

ajith
ajith

Leave a Comment