வலிமை சரவெடிக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வேற லெவலில் வெளியாகிய வீடியோ.!

0

தல அஜித் தற்போது h வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கி விட்டது.  இந்த நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து அப்டேட் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.

மற்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட் வெளியான நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் வலிமை அப்டேட் ஏதாவது வெளியிடுங்கள் என வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

valimai
valimai

அதற்கு பதில் அளித்த படக்குழு ரசிகர்களின் கோபத்தை தடுப்பது போல் அஜித்தின் மேனேஜர் சமிபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் வலிமை படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் வெளியாகும் அதுவரை பொறுமையாக இருக்கவும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் அப்டேட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் அஜித்தின்  அதிக ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதோ அந்த வீடியோ.