வெளியானது வலிமை படத்தின் புத்திய அப்டேட்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாகவும் விளங்குபவர் நடிகர் தல அஜித் குமார். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது அந்த பாடல் உலகமெங்கும் பரவி ஒரு புதிய சாதனையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

valimai
valimai

இதற்கு முன்பு வலிமை திரைப்படத்தில் எந்த ஒரு அப்டேட்டும்  இல்லாத காரணத்தினால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் செப்டம்பர் 3 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த ஒரு சில நாட்களிலேயே ஒரு ஸ்பெஷல் வீடியோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளார்களாம் என்ற தகவலும் கசிந்துள்ளது. இதனை அறிந்த தல ரசிகர்கள்  மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.

Leave a Comment