ஒருவழியாக முடிவுக்கு வந்த வலிமை.! இதுவரை அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவுலகில் அண்மை காலமாக தொடர்ந்து டாப் நடிகரின் படங்கள் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. அந்த வகையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தளபதி விஜயின் “பீஸ்ட்” படம் வெகுவிரைவிலேயே திரையரங்கில் வெளிவர ரெடியாக இருக்கிறது.

இன்னும் சில நாட்களே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது அந்த அளவிற்கு படத்தில் சென்டிமென்ட், சமூக அக்கறை, ஆக்சன் போன்ற அனைத்துமே சிறப்பாக இருந்ததால் நன்றாக ஓடியது.

வலிமை படத்தில் அஜித்துடன் கைகோர்த்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, புகழ், சைத்ரா ரெட்டி, சில்மிஷம் சிவா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். படம் நீண்ட நாட்கள் ஓடி மிகப் பெரிய ஒரு வசூலை அள்ளியது.

200 கோடி வசூல் அள்ளிய தகவல்கள் வெளியானது ஆனால் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் தள்ளியதாக கூறி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதனை உறுதிப்படுத்தினார். ஒரு மாதம் கழித்து வலிமை திரைப்படம் zee 5 OTT தனத்தில் வெளியாகியது.

அங்கேயும் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது இருப்பினும் பல்வேறு இடங்களில் வலிமை திரைப்படம் திரைஅரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது வலிமை படம் இதுவரை வெளியாகிய 43 நாட்களை கடந்து உள்ளது ஆனால் இப்பவும் ஒரு சில இடங்களில் வலிமை படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது தற்போது வரை வலிமை திரைப்படம் சுமார் 230 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment