இணையதளத்தில் லீக் ஆன வலிமை சூட்டிங் ஸ்பாட் வீடியோ.! யார் பார்த்த வேலைடா இது படக்குழு அதிர்ச்சி.!

தல அஜித் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்பொழுது வலிமை படத்திலிருந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஏனென்றால் இதற்கு முன் அஜித் பைக் ரேஸ் காட்சியின்போது காயம் செய்யப்பட்டதாகவும் அந்த காயத்துடன் அஜித் அந்த காட்சியை முடித்து கொடுத்தார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பெரிதாக பேசப்படும் என கூறியுள்ளார்.

படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது இதில் அஜித் பைக் ரேஸ் காட்சியில் டூப் போடாமல் நடித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளன, இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் இருந்து சில காட்சிகள் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏனென்றால் படக்குழு இதுவரை நடிகைகள் மற்றும் வில்லன்கள் யார் என்ற தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படி அஜித் இடம்பெறும் காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆவதால் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் படக்குழு. அதுமட்டுமில்லாமல் இனி படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என தடை போட்டுள்ளாராம் இயக்குனர் வினோத்.

ஆனாலும் இப்படி அடிக்கடி வலிமை படத்தின் வீடியோ லீக் ஆனதால் படக் குழுவில் ஏதோ ஒரு கருப்பு ஆடு இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.

https://twitter.com/Dheena_shankar/status/1237408066619858947?s=20

Leave a Comment