சரியான கணக்கு போட்ட தல அஜித்..! இந்த முறையாவது ஆன்சர் கரெக்டா வருமா..?

valimai movie release latest update: சினிமாவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று இருப்பவர்தான் அஜித்.  இவரை தல அஜித் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இவ்வாறு பிரபலமான நடிகர் அஜித் வலிமை எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் படபிடிபானது வெகு நாட்களாக நடைபெற்று வருகிறது.  இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனதற்கு தல அஜித்திற்கு அடிபட்டதுதான் காரணம்.

பின்னர் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதன் காரணமாக படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் திரைப்பட படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஐதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில் 60% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பானது வெளிநாட்டில் எடுக்க உள்ளார்களாம் ஆனால் வெளிநாட்டில் ஷூட்டிங் எடுப்பதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தினால் படக்குழுவினர்கள் அந்த காட்சிகளை டெல்லியிலேயே எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜனவரி மாதத்திற்குள் முற்றிலுமாக முடித்துவிட்டு தமிழ் புத்தாண்டு அன்று திரைப்படத்தை திரையில் வெளியிட வேண்டும் என தலஅஜித் மிகத்தீவிரமாக உள்ளராம்.

இவ்வாறு கணக்கு போட்டு வைத்த தல அஜித்தின் ஆசை நிறைவேறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment