என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் போல் வலிமை திரைப்படத்தில் யார் நடிக்க இருக்கிறார் தெரியுமா.?

கடந்த வருடத்தில் தல அஜித் இரண்டு மிகப்பெரிய ஹிட் திரைப் படங்களை கொடுத்துள்ளார் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிய விசஸ்வாசம் திரைப்படம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தன.

இந்தநிலையில் நேற்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தயாரித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில்.

தற்பொழுது படத்தில் பிரசன்னா இணைந்துள்ளதாக தகவல் பரவின இது வதந்தியா இல்லை உண்மையா என அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிரசன்னா அதிகாரபூர்வ ட்விட்டரில் அறிவித்துள்ளார், இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை பிரசன்னா வலிமை திரைப்படத்தில் இருந்தால் என்ன கதாபாத்திரமாக இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரம் தான் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version