இதன் வேகம் நாளை உங்களுக்கு தெரியும்.! வலிமை பட புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா ரசிகர்களே மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.  அதேபோல் வலிமை திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் அந்தளவு இரசிகர்களின் வெறித்தனத்தை பார்க்க முடிகிறது.

முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானால் முதல் நாள் முதல் காட்சி எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் அதையெல்லாம் தாண்டி அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு பாலாபிஷேகம் கட்அவுட் பேனர் என அமர்க்களப் படுத்தி விட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது ரசிகர்களாகிய நமக்கு புல்லரித்து விடும்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை ஸ்கிரீனில் காணும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.  சமுக வளைதள முழுவதும் ரசிகர்களின் ஆர்ப்பாட்டங்களும் கொண்டாட்டங்களும் தான். இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் அஜித்  ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது அப்படியிருக்கும் நிலையில் ஆக்ஷன் காட்சிகளில் பணி புரிந்துள்ள திலீப் சுப்பராயன் படத்தில் அஜித் பயன்படுத்திய பைக் மற்றும் கார்ரின் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இதன் வேகம் நாளை உங்களுக்கு தெரியும் என கமெண்ட் செய்துள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட பதிவு

Leave a Comment