தல அஜித்தின் வலிமை திரைப்படம் இத்தனை கோடிக்கு வியாபாரமா!! தலன்னா சும்மாவா..

0

ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித்.  பொதுவாக இவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைசியாக இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை  திரைப்படம் வெளிவந்து.அமோக வெற்றியை பெற்றது அதோடு இத்திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக அமைந்ததால் இந்த திரைப்படம் அமோக வெற்றியைப்  பெற்றது.

இந்த திரைப்படத்தில் தல அஜித் எச்.வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இவர்கள் மூவரும் இணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரை வெளி வராத காரணத்தினால் இவரின் ரசிகர்கள் சின்னத்திரை நடிகைகள் முதல் அரசியல்வாதிகள் என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.ஆனால் அப்போதும் வெளிவரவில்லை இவ்வாறு இரண்டு முறை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளி வருவதாக கூறி தற்பொழுது வரையிலும் வெளி வராத காரணத்தினால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்து வந்தார்கள்.

இருந்தாலும் ரசிகர்கள்  வலிமை திரைப்படம் எப்பொழுது வந்தாலும் பார்ப்போம் என்று காத்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிக்காக இத்திரைப்படத்தில் நடித்து வரும் அனைத்து நடிகர்,நடிகைகளும் ஹைதராபாத் செல்ல உள்ளார்களாம்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இந்த மாதம் இறுதியில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டும்  ஒன்றாக வெளிவரும் என்றும் அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது  சாட்டிலைட், டிஜிட்டல் என உலகம் முழுவதும் மொத்த திரையரங்கு உரிமைக்கு ரூபாய் 200 கோடிக்கு மேல் வியாபாரமாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.