பிரமாண்ட தொகைக்கு விலை போன வலிமை தமிழ்நாடு ரைட்ஸ்.! ஆனாலும் விஜயை விட ஒரு கோடி கம்மிதான்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தல அஜித்.இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பில் படக்குழுவினர்கள் இருந்து வருகிறார்கள்.

ஏனென்றால் ரசிகர்கள் பொது நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் என்று பலவற்றிற்கு சென்று அங்கு வலிமை அப்டேட் குடுங்க என்று அனைவரிடமும் கேட்டு வருகிறார்கள். தல அஜித் நடிப்பில் படம் ரிலீஸ்சாகி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இதுவரையிலும் இன்னும் எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

அஜித் சினிமாவில் மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கவனம் செலுத்தி வருவதால் தான் ஒரு வருடத்திற்கு பிறகு வலிமை திரைப்படம் ரிலீஸ்சாக உள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

அந்தவகையில் போனிகபூர் சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் தமிழ்நாடு ரைட்ஸ்சை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அதோட வலிமை திரைப்படம் விரைவில் படப்பிடிப்புகள் முடிய உள்ளதால் வலிமை படத்தின் வியாபாரங்களை ஆரம்பிக்க தொடங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் அஜித் இதுவரையிலும் நடித்திருந்த திரைப்படங்களிலேயே விசுவாச திரைப்படம்தான் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

விசுவாசம் திரைப்படத்தை விடவும் வலிமை திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வெற்றியை பெற்று விடும் என்றே பலர் நினைத்து வந்தார்கள். ஆனால் தற்பொழுது தமிழ்நாடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் 67 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாம். 67 கோடி விஸ்வாச திரைப்படத்தை விட அதிகமாக இருந்தாலும்  தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் 78 கோடிக்கு பேசி பிறகு கொரோனா பிரச்சனையினால் 68 கோடிகாய குறைத்தார்கலாம் இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Leave a Comment