வலிமை திரைப்படத்தில் தல அஜித்தின் அம்மா இவரா..? திரைப்படத்தின் எதிர்பார்ப்பை எகிறவிட்ட பட குழுவினர்..!.

valimai movie latest update: வினோத் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம்தன் வலிமை இந்த திரைப்படத்தில் தல அஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். சுமார் பல மாதங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் வினோத் இயக்கத்தில் மிக பெரிய அளவு முதலீடு போட்டு எடுக்கப்படும் ஒரு திரைப்படமும் இதுதான். மேலும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோயினான ஹுமா குரோஷி தல அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்த பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது.  அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு அம்மாவாக நடிக்கப் போவது நடிகை சுமித்ரா தான்.

மேலும் தல அஜித் இந்த திரைப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளாராம் அதில் ஒன்றில் இளமையான மாடர்ன் லுக் மற்றும் மற்றொன்றில் வயதான தோற்றம் என கூறி உள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பது மட்டுமல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருகாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

sumithra
sumithra

Leave a Comment