கோலிவுட் வட்டாரத்தையே கதறவிட தல அஜித் எடுத்த அதிரடி முடிவு..! தர்ம அடி வாங்க ரெடியா..?

valimai movie latest update: திரை உலகில் எந்த ஒரு பக்க பலமும் இன்றி தனது சொந்த உழைப்பில் முன்னேறி வந்தவர் தான் தல அஜித்.  இவர் ஆரம்பத்தில் சினிமாவில் பல சறுக்கல்களை கண்டு இருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகராகவும் ரசிகர்களுக்கு உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலிக்கிறார்.

இவ்வாறு பிரபலமான தல அஜித் தற்போது வலிமை எனும் திரைப்படத்தில் மிக தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  தல அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.  மேலும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய புது புது அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக தல அஜித் ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்றால் தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய முழு திறனையும் காட்டி விடுவார்.

அதே போல தான் இந்த திரைப்படத்திலும் மிக தீவிரமாக நடித்து வருகிறார்.  மேலும் தல அஜித் இந்த திரைப்படத்தில் ஒரு சீனியர் போலீஸ் அதிகாரியாக நடிப்பது மட்டுமல்லாமல் அவருடைய பெயர் ஈஸ்வரமூர்த்தி எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தல அஜித் இந்த திரைப்படத்திற்கான சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் சென்னை போலீஸ் அதிகாரிகளிடம் சந்தித்து அவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறாராம்.

மேலும் போலீஸ்காரர்களிடம் காயமின்றி எப்படி ஒருவரை தர்ம அடி அடிப்பது என்ற வித்தையும்  கற்றுக் கொண்டு வருகிறாராம். மேலும் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் சாதாரண சண்டை காட்சிகள் இல்லாமல் போலீஸ்காரரின் வர்ம அடி சண்டைக்காட்சி யாக இருக்க வேண்டும் என தல அஜித் முடிவு செய்துள்ளாராம்.

இவ்வாறு தல அஜித் முடிவை பார்க்கும் பொழுது இந்த திரைப்படத்தின் மூலமாக தல அஜித்தை உண்மையான காவல்துறை அதிகாரியாக பார்க்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவ்வாறு செய்திகள் வெளிவந்த இதன் காரணமாக இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது.

ajith-1

Leave a Comment

Exit mobile version