“வலிமை திரைப்படம்” நல்லா இருக்கு.. ஆனா முழு திருப்தி தரவில்லை புலம்பும் பிரபல இயக்குனர்.!

அண்மைகாலமாக நடிகர் அஜித்குமார் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த படங்களை கொடுத்தாலும் அதில் அதிக அளவு சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெறுகின்றன.  அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை இப்போ வெளிவந்த வலிமை திரைப்படத்தில் கூட நீங்கள் அதையே காண முடியும்.

வலிமை படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல ஆக்சன் காட்சிகள் இருந்தாலும் அதே அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது அதன் காரணமாகவே கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்கி உள்ளது.

வலிமை படம் முதல் நாளில் மட்டுமே 34 கோடி வசூல் செய்தது அதனை தொடர்ந்து வலிமை படம் அடுத்தடுத்த நாட்களிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இதுவரை சுமார் 200 கோடி வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியாக அறிவித்தார். இப்பொழுது திரையரங்கையும் தாண்டி அஜித்தின் வலிமை திரைப்படம்.

ZEE 5 OTT தளத்தில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இது இப்படி இருக்க.. படத்தை பார்த்துவிட்டு இயக்குனரும், நடிகருமான வெங்கட்பிரபு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. வலிமை படம் நன்றாக இருந்தது ஸ்டண்டுகள் எல்லாம் சூப்பர். அஜித்தின் படம் என்பதால் வலிமை படத்தை மிகப்பெரிய அளவில் எக்ஸ்பெக்டேஷன் வைத்திருந்தேன்.

அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை.. ஹச். வினோத்தின் டீடைலிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்.  ஏதோ ஒரு இடத்தில் வலிமை திரைப்படம் எனக்கு முழு திருப்தி கொடுக்கவில்லை. என அதிரடியாக கூறியிருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Leave a Comment