சம்பவம் தரமானதாக இருக்கும் டோன்ட் வரி வலிமை பற்றி முதன் முறையாக பதிவிட்ட H.வினோத்.? வைரலாகும் பதிவு

0

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் பின்பு கோரண ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில் தற்பொழுது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வலிமை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார் இவர் மூன்று பாடலை முடித்து விட்டதாகவும் ஒரு தீம் மியூசிக்கை முடித்து விட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் படப்பிடிப்புகள் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அஜீத் தற்போது ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகியது, இந்த நிலையில் வினோத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் தரமானதாக இருக்கும் என வெறித்தனமாக பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த பல சினிமா பிரபலங்கள் தெரியும் சார் என அதிரடியாக பதில் அளித்துள்ளார், ஆனால் இது இயக்குனர் வினோத் ட்விட்டர் கணக்கு இல்லை என அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது அதேபோல் வினோத் ட்விட்டர் பேஸ்புக் பக்கத்தில் இல்லை என்பது அதிகார பூர்வமான உண்மை என கூறுகிறார்கள்.

ஆனால் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படி தெரியாமலேயே பதிவிட்டு வருவது வருத்தத்துக்குரிய செய்தியாக இருக்கிறது.