தல அஜித்திற்கு மட்டும் ஓகே.! தனுஷின் செயலால் அசந்து போன அஜித் ரசிகர்கள்.! மிரண்ட கோலிவுட்

இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது அடுத்ததாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா  ஊரடங்கு முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.

இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டு இருந்தது படக்குழு ஆனால் தற்போது இந்த காட்சிகள் அனைத்தையும் தமிழ்நாட்டில் எடுக்க படக்குழு அதிரடியாக முடிவெடுத்துள்ளது, அதனால் ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார், இதற்கு முன் யுவன்சங்கர் ராஜா அஜித் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது, அதிலும் மங்காத்தா மற்றும் பில்லா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக் பற்றி சொல்லவே வேண்டாம் அன்றிலிருந்து இன்று வரை பல ரசிகர்களின் காலர் டியூன் இதுதான்.

அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது ரசிகர்களிடம், வலிமை திரைப்படத்தின் டைட்டில் வெளியான பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராத நிலையில், யுவன்சங்கர்ராஜா படத்திற்காக இரண்டு பாடல்களையும் முடித்திருந்தார் அதில் முதல் பாடல் காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்கினார்கள் அந்த படம் தல அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா valimai படத்தின் அனைத்து பாடல்களையும் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, அதனால் மொத்தம் வலிமை திரைப்படத்தில் நான்கு பாடல்களும் 2 தீம் மியூசிக்களும் இடம் பெற்றுள்ளன என கூறுகிறார்கள், அதிலும் அஜித்திற்கு ஒரு காதல் பாடல், அஜீததின் அறிமுக பாடல் கொண்டாட்டமான பாடல், ஒரு மெலடி பாடல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த valimai படத்தின் மெயின் தீம் மியூசிக் இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் உருவாகிய மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் போன்று மரண மாசாக வந்துள்ளதாகவும் கண்டிப்பாக இந்த தீம் மியூசிக் மிகப் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்றும் தீம் மியூசிக் உடன் தலையை திரையில் பார்த்தால் திரையரங்கமே அதிறும் எனவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, பொதுவாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களில் யாராவது ஒரு நடிகரை பாட வைத்து விடுவார் அந்த வகையில் வலிமை திரைப்படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார், இதைப்பற்றி வலிமை குழுவினரிடம் கேட்டபொழுது உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த தகவலை பிரபல முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது ஒருவேளை நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் பாடலைப் பாடி இருந்தால் அந்தப் பாடல் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, மட்டுமில்லாமல் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட்டாக அமையும் என தெரிகிறது.

Leave a Comment