வலிமை திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட சார்ப்பாட்ட பரம்பரை நடிகர்.!

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கு பல நகத்தை விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன அப்படி நகர்த்தி விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் ப்ளூ சட்டை மாறன் இவர்களை திரைப்படத்தை விமர்சனம் செய்யாமல் தனிப்பட்ட முறையில் அஜித்தை மோசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கேட்ட பல பிரபலங்கள் அவரை வெளுத்து வாங்கி வருகிறார்கள் இதற்கு முன் தயாரிப்பாளர் ஒருவர் ப்ளூ சட்டை மாறனை கழுவி கழுவி ஊற்றினார் அதனைத் தொடர்ந்து சார்பட்ட பரம்பரை திரைப்படத்தில் நடித்த ஜான் கொக்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது அன்புள்ள ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர் நான் ஒரு சாதாரண நடிகன் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் எனக்கு உங்களிடம் நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது.

சினிமா இருந்தால் தான் நீங்களும் இருக்கிறீர்கள் சினிமா என்றாலே விமர்சனமும் சேர்ந்துதான் விமர்சனம் சினிமாவை வளர வைப்பது அதனாலேயே சினிமா விமர்சகர் மதிக்கப்படுகிறான். குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ அதே அளவு பெரியவை மரியாதையாக பேசுவது தேவை. சினிமாவில் உழைப்பவர்கள் பலரும் தங்கள் ஈடுபாட்டை அர்ப்பணிப்பை கொடுத்துதான் உழைக்கிறார்கள் பெரிய பெரிய இயக்குனர்கள் நடிகர் சூப்பர் ஸ்டார் பணியாற்றுகிறார்கள் அவர்கள் தங்களை இந்த அடையாளங்களில் நிலைநிறுத்த எத்தனை போராடி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்து இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும் முதலில் நடிகராக தன்னை மக்கள் முன் நிரூபித்த பிறகே அவர்கள் சூப்பர் ஸ்டார் அவர்கள் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது அது நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.

நீங்களும் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளீர்கள் அதன் வலி வேதனை என்னவென்று உங்களுக்குப் புரியும் எந்த படைப்பாளியையும் தன் படைப்பை வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள் இந்த நிலையில் படப்பிடிப்பு நடத்தி திரைக்கு கொண்டு வருவது எவ்வளவு சிரமம் என்பதை நீங்கள் அறிவீர்கள் அது மக்களை சென்று சேருவது எளிதல்ல சினிமா எதிர்பார்ப்பதை போல் நடப்பதில்லை கதைகள் சில நேரம் பிடிக்கும் சில நேரம் பிடிக்காமல் போகும் அப்படித்தான் சினிமா நீங்கள் விமர்சனம் செய்யுங்கள் தொழில்நுட்பங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்யுங்கள் தமிழ் சினிமாவைப் புரிந்து விமர்சனம் செய்யுங்கள் ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை தவிர்த்து மரியாதையுடன் விமர்சியுங்கள்.

இதுவரை நீங்கள் மோசமாக கேவலமாக பேசிய விமர்சனங்கள் தான் அதிகம் இருக்கின்றன அது ஒரு பெரிய விஷயம் அல்ல யார் வேண்டுமானாலும் கேவலமாக பேசலாம் திறமையாக பேசுவது தான் கடினம் அப்படி நீங்கள் மட்டமான சொற்களால் விமர்சிப்பதை மட்டமான சினிமா என்று சொல்லாமல் விமர்சனத்தையே மட்டமானது என்று ஆகிவிடும்.

உங்கள் பின்னால் வரும் விமர்சனங்களுக்கு மரியாதையை மக்களிடம் குறைந்து விடும் தமிழில் நல்ல சொற்கள் பல சொற்கள் இருக்கின்றன அவற்றை கொண்டு நல்ல மரியாதையான சொற்களால் நாகரிகச் விமர்சனம் செய்யுங்கள் பிறரை உங்கள் பக்கம் திருப்புவதற்காக ஈர்ப்பதற்காக இல்லாமல் எல்லோருக்கும் வெற்றியைத் தரும்படி விமர்சியுங்கள் .

இங்கே சினிமாவை நம்பி சினிமாவில் நிற்க வேண்டும் என்று என்னை போன்று பலர் இருக்கிறார்கள் அவர்களும் வளரவேண்டும் சினிமாவில் இருந்தால்தான் இது எல்லாமே அதனால் அடுத்த நீங்கள் விமர்சனம் செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்வது நல்லது உங்களால் பலரும் வாழவேண்டும் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் சினிமாவில் எத்தனை துறைகள் இருக்கின்றன அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன பலபேர் சாதிக்க நினைத்து  வந்து பாதியில் போகிறார்கள் அதிலும் மீண்டு வருபவர்கள் தான் மக்கள் முன் பெயருடன் நிற்கிறார்கள் அதையெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டும் தங்களின் விமர்சனங்கள் படைப்பாளிக்கு ஊன்றுதளாக இருக்க வேண்டும் தவிர அவர்களை புண்படுத்தும் விதமாகவோ திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை தடுக்கும் விதமாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் இதனைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்புகிறேன் இது சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகனாக என் கோரிக்கை.

நீங்கள் என்ன வேணா பண்ணுங்க உங்களுக்கு பிடித்ததை பண்ணுங்க ஆனா அடுத்தவனை மிதிச்சி முன்னேறவேண்டும் என நினைக்காதீங்க.

வாழு, வாழ விடு என கூரியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version