வலிமை திரைப்படத்தில் அஜித் பயன்படுத்திய பைக்.! விலையை கேட்டால் தலையே சுத்துதே.!

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் வசூல் மன்னனாக வலம் வருபவர். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார், மேலும் அஜித் வலிமை திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என கூறுகிறார்கள், இந்த நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறும் என படத்தின் தயாரிப்பாளரே சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பைக் ரேஸ் காட்சி படப்பிடிப்பில் அஜித்திற்கு சிறு அடிபட்டதால் ஓய்வில் இருந்து வருகிறார், இந்த நிலையில் அடுத்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஒரு ஸ்பெஷல் பைக் ஏற்பாடு செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் 5 பைக்  இந்த திரைப்படத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள தாம் இதன் மொத்த விலை 90 லட்சம், இதை வைத்தே ஒரு மாஸ் ஆக்ஷன் காட்சிகள் எடுத்ததாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த நிலையில் படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் ஹீரோயின் யார் வில்லன் யார் என்ற விவரம் இதுவரை வெளியிடாமல் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. விரைவில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment