வலிமை படப்பிடிப்பில் பைக்கில் வேற லெவலில் ஸ்டண்ட் செய்த தல அஜித்.! இணையதளத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் உதவி  செய்யும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் தல அஜித் இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரப்போகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது வலிமை திரைப்படம் முதலில் ஹைதராபாத்தில் நடந்து வந்தது வலிமை படப்பிடிப்பின் போது தல அஜித் அங்கு பைக்கில் ஸ்டண்ட் செய்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது.

இதனையடுத்து வலிமை திரைப்படத்தைப் பற்றி அவரது ரசிகர்கள் அப்டேட் எப்ப வரும் என காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தல பிறந்தநாளன்று மே 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்களுக்கு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வலிமை படத்திலிருந்து புதிதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் தல அஜித் பைக்கில் நேராக வீலிங் செய்து கொண்டு போகிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் வேற லெவல் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ajith

Leave a Comment

Exit mobile version