வலிமை திரைப்படத்தில் அஜித்தின் பெயர் இதுதானா.? வெளியாகிய மாஸ் அப்டேட்

தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று ஹெட்ச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். படத்தில் நடிகைகள் யார்? வில்லன் யார்? என்ற தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த முடிந்தது, மேலும் தற்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இது முடிந்தவுடன் சுவிட்சர்லாந்து நாட்டில் படப்பிடிப்பை நடத்தயிருக்கிறார்கள் படக்குழு.

படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வருமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள் அதுமட்டும் இல்லமல்  சமூக வளைதளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள், இந்த நிலையில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது தற்பொழுது வெளியாகி உள்ளது.

வலிமை திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் அஜித்தின் பெயர் ‘ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்’ என கூறுகிறார்கள், இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் வரை காத்திருக்கலாம்.

Leave a Comment