உயிரும் உனக்கு நகம்போல, வெட்ட வெட்ட முளைத்திடுவாய்.. அஜித் காயம் பற்றி உருக்கமாக பதிவிட்ட பிரபலம்.!

தல அஜித் தற்பொழுது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை போனிகபூர் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் இந்த நிலையில் படத்தில் பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம் பெறுகின்றன என தகவல் சமீபத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில் அஜீத் வலிமை பட சூட்டிங்கில் கலந்து கொண்டார் அப்பொழுது பைக் ஓட்டுவது போல் காட்சி எடுக்கப்பட்டது அதில் எதிர்பாராதவிதமாக அஜித் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும் அஜித் விரைவில் குணமடைய ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் அருண்பாரதி அஜித் பற்றி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘உயிரும் உனக்கு நகம்போல , வெட்ட வெட்ட முளைத்திடுவாய் , காயம் எத்தனை வந்தாலும் , ரசிகனுக்காக பிறப்பெடுப்பாய்! என கூறியுள்ளார்.

https://twitter.com/ArunbharathiA/status/1230055782026076160

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment