ஒவ்வொரு வார்த்தையும் செதுக்கியது போல் அஜித் கூறிய பொன்மொழியை வெளியிட்ட வலிமை பட நடிகர்.!

தல அஜித் கூறியதாக ஒரு பொன்மொழி ஒன்றை வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமீபகாலமாக அஜித்தின்  திரைப்படங்கள் வசூலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது அதுமட்டுமில்லாமல் தல அஜித் தற்போது மேற்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தல அஜித் இந்த திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் எனவும் பைக் சேசிங் காட்சிகள் கார் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராஜா ஐயப்பா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அஜித் கூறியதாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

ajith movie
ajith movie

இந்த பதிவு அஜித் சம்மதத்துடன் தான் வெளியிட்டுள்ளதாகவும் அந்த பதிவில் அவர் கூறியதாவது “ஏழை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலையை வரையறுக்கிறது. அவர்களின் குணாதிசயங்களை அல்ல நல்லவர்களும் கெட்டவர்களும் சமூகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார்கள்.

எனவே ஒரு நபரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய குண விசேஷங்களை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும்”. என கூறியுள்ளார் அஜீத் கூறிய இந்த பொன்மொழியை வலிமை படத்தில் நடித்த நடிகர் ராஜா ஐயப்பா  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக் பெற்று வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த பொன்மொழியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment