மிரட்டலான லுக்கில் அஜித்.! இணையதளத்தில் வைரலாகும் வலிமை படத்தின் புதிய போஸ்டர்.!

0

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். படத்தின் டைட்டிலை சமீபத்தில்தான் படக்குழு வெளியிட்டது.

மேலும் வலிமை திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார், அதன்பிறகு எந்த தகவலையும் இன்னும் படக்குழு வெளியிடவில்லை, இந்த நிலையில் வலிமை படம் பற்றிய ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் வலிமை திரைப் படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது அதுமட்டுமில்லாமல் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெறும் என கூறுகிறார்கள், இந்த நிலையில் என்னை அறிந்தால் படத்தின் லுக்கை மையமாகக்கொண்டு இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது, இதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.