இணையதளத்தை தெறிக்கவிடும் வலிமை திரைப்படத்தின் போஸ்டர்கள்.! இதோ புகைப்படங்கள்

0

தல அஜித் கடைசியாக நடித்த திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, குறிப்பாக பெண் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது இந்த திரைப்படத்திற்கு.

இந்த நிலையில் மீண்டும் அஜித் இதே கூட்டணியில் போனி கபூர் தயாரிப்பில் தல60 திரைப் படத்தில் இணைந்துள்ளார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்டோரி என கூறுகிறார்கள், அதுமட்டுமில்லாமல் படத்திற்கு வலிமை என டைட்டில் வைத்துள்ளார்கள் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது பூஜையில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் வலிமை திரைப்படத்தின் மூலம் தான் போனி கபூரின் மகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார், படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் போஸ்டர்களை அவர்களே உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள் இந்த போஸ்டர்களை இணையத்தில் படுவேகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.