வலிமை படத்தின் பைக் ஸ்டன்ட் காட்சி இணையதளத்தில் லீக்.! த்தா இனிமே தான் பல தரமா சம்பங்கள் காத்துகிட்டு இருக்கு! வீடியோ உள்ளே

தல அஜித் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் படங்களை தயாரித்து வரும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார், ஏற்கனவே வினோத் இயக்கத்தில் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நாயகியாக ஹீமா குரோஷி நடித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது, ஆனால் இதுவரை படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால் இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும், கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு நடித்து இருப்பார் அஜித் என சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் கூறினார்.

https://twitter.com/Nethaji24055477/status/1235158175843627008

ஏனென்றால் படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளிலும் கார் ரேஸ் காட்சிகளிலும் நடிக்க இருப்பதாக கூறினார்கள், அதேபோல் சமீபத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளில் கலந்து கொண்ட பொழுது சிறிது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. அதேபோல் காயங்களுடன் அஜித் பைக் ரேஸ் காட்சியை முடிந்ததாகவும் கூறினார்கள்.

இந்த நிலையில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளின் பொழுது ரிகர்சல் பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் இயக்குனர் வினோத் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது, இந்த காட்சி இணையதளத்தில் லீக் ஆனதால் படக்குழு கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவலை ரகசியமாக காத்து வருகிறார்கள், ஆனால் இப்படி வீடியோ கசிந்து உள்ளதால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் படக்குழு.

Leave a Comment