வலிமையா.. பீஸ்ட்டா.. அதிகம் வசூல் செய்த படம் எது.? உண்மையே சொன்ன சினிமா பிரபலம்..

அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கின்றன. அந்த வகையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இப்போ விஜயின் பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

குறிப்பாக தளபதி விஜய்யின் திரைப்படம் ஒவ்வொன்றும் வசூலில் வாரி குவிக்கும் அதுபோல பீஸ்ட் திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லாத காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தளபதி விஜய் நெல்சன் மற்றும் படக்குழுவினரை அழைத்து விருந்து வைத்துள்ளார் அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் வைரலாகின. இது இப்படி இருக்க.. தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் பீஸ்ட் படம் வசூலில் அதிகமா அல்லது அஜித்தின் வலிமை படம் வசூலில் அதிகமா என கேள்வி எழுப்பி உள்ளனர் இதற்காக அவர் பதிலளித்த அவர் நிச்சயமாக அஜித்தின் வலிமை திரைப்படம் தான் அதிகம் வசூல் செய்தது என அடித்துக் கூறியுள்ளார்.

அஜித்தின் வலிமை திரைப்படம் இதுவரை 234 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன ஆனால் விஜய்யின் பேஸ்டு திரைப்படம் இருவரையும் 193 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன அதன்படி பார்வையில் அஜித்தின் வலிமை திரைப்படம் தான் அதிகம் வசூல் செய்து உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

 

Leave a Comment