சிவகார்த்திகேயன் இமானின் முன்னாள் மனைவி ஆதாரத்தை பார்த்துவிட்டு தான் நான் பேசுகிறேன்.. அதை வெளியிடும் சூழ்நிலை வந்தால் வெளியிடுவேன்.. பூகம்பத்தை ஏற்படுத்திய பிரபலம்…

Actor Sivakarthikeyan: பலரின் வாழ்க்கையில் விளையாடிய சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை க்ளோஸ் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் குழந்தைகள் நலனுக்காக அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதாகவும் சமீப பேட்டி ஒன்றில் டி இமான் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

மேலும் இமான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என பல வதந்திகள் வெளியானதை அடுத்து இதற்கு விளக்கம் கொடுத்த இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவர் கூறினார். இந்நிலையில் தற்பொழுது மூத்த பத்திரிகையாளர் வலை பேச்சு பிஸ்பி சிவகார்த்திகேயன் இமான் விவாகரத்து குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் விவகாரம் ஆறு மாதத்திற்கு முன்பே எங்களுக்கு தெரியும் இமானுக்கும் எங்களுக்கு இடையே இருக்கும் நெருங்கிய நண்பர் மூலமாக இந்த மொத்த கதையும் எங்களுக்கும் தெரியும். இந்த விஷயம் குறித்து எல்லாம் தெரிந்து இருந்தும் நாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் இதுவரை சொன்னது இல்லை ஆனால் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று இமான் புதுவெளியில் சொன்ன பிறகு அதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

அதை தான் நாங்கள் செய்து வருகிறோம் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஓர் பேராதரவு இருக்கிறது எனவே மக்களிடம் அவர் குறித்து இந்த விஷயம் தெரிய வரவேண்டும் என்று பல விஷயங்களை கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாக சொல்கிறார்கள். இப்படி ஒரு செய்தி பரவும் போது சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து டி இமான் சொல்வது எல்லாமே பொய் நான் நேர்மையானவன், உண்மையானவன் என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை சொல்லி இருக்கலாம்.

ஆனால் சிவகார்த்திகேயன் செய்த அந்த துரோகத்திற்கு ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை பார்த்து விட்டுதான் நான் பேசுகிறேன் அதை வெளியிடும் சூழ்நிலை வந்தால் நிச்சயம் வெளியிடுவேன் அதேபோல இமான் பேட்டி வெளியான அடுத்த நாளே சிவகார்த்திகேயன் அவரை தொடர்பு கொண்டு இந்த பேட்டியை இணையதளத்தை நீக்க வேண்டும் என்று கெஞ்சிவுள்ளார்.

அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது அதை அவர்கள் தரப்பு மறுக்கும் பட்சத்தில் ஆதாரத்தை வெளியிடுவோம் என்றார். தொடர்ந்து பேசிய பிஸ்மி நல்ல வேலையாக சிவகார்த்திகேயன் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை ஒருவேளை தீபாவளிக்கு வெளியாகியிருந்தால் மக்கள் படத்தை புறக்கணித்து இருப்பார்கள். சிவகார்த்திகேயனை பிரண்டாக பார்த்து ரசிகர்கள் அவரை இப்பொழுது திட்டுவதை பார்க்க முடிகிறது என்று பிஸ்மி அந்த பேட்டியில் தெரிவித்தார்.