என்கிட்ட இருக்கிற ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டால் உன் வாழ்க்கையே அவ்ளோதான்.! சிவகார்த்திகேயனை மிரட்டும் பிரபலம்..

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் குறித்த ஆடியோ ஆதாரம் என்னிடம் இருப்பதாக பிரபல விமர்சகர் அளித்திருக்கும் பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் டி இமான் இவர் இசையில் வெளியான ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட் பெற்றிருக்கும் நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் டி இமான் சிவகார்த்திகேயன் குறித்து பேசினார் அதாவது மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமா ராஜா, எங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன் அதோட மட்டுமல்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார்.

ஆனால் இனி அவருடன் நான் பயணிக்கப் போவதில்லை இந்த ஜென்மத்தில் நீ சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம் காரணம் எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது இது குறித்து நான் அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன் அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும் அந்த வலியும், வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறினார்.

எனவே இவர் பேசியது குறித்து ஏராளமானவர்கள் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். அப்படி இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்தார் என்று சொன்னது எனக்கு புரியுது ஆனால் அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து இமானின் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சிவகார்த்திகேயன் நான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் மேலும் அந்தணன் பிறர்மனை நோக்காமை என்று வள்ளுவர் சொன்னது சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பலர் மதிக்காதது தான் இதற்கு காரணம்.

ஒருவரை நம்பி வீட்டுக்குள் அழைக்கும் பொழுது அதற்கான மரியாதை அவர்கள் காப்பாற்றி இருக்க வேண்டும் அதேபோல் இமானுடைய முன்னாள் மனைவி சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்று சொல்லும் போதே அவருக்கு உங்களுக்கும் என்ன உறவு என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. இந்த விவாகரத்தில் மோனிகா அமைதியாக இருந்திருக்கலாம் அதேபோல் அந்த வீடியோ வைரலாகாமல் இருப்பதற்கும் மீம்ஸ்கள் வெளியிடவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் பெரும் தொகையாக மாறி இருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து விட்டார்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக யூடியூபில் பேசுபவர்களுக்கு பெரும் தொகையும் அவருக்கு எதிராக பேசுபவர்களுக்கு யூடியூப் சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டிருக்கிறது அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.