தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக பல கோடி ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள். இத்திரைப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் போஸ்ட் பிரமோஷன் வேலைகளில் மிகவும் தீவிரமாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இத்திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஹீமா குரோஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு,குக் வித் கோமாளி புகழ், போலீஸ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் ரேசிற்க்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாகவும் சட்ட விரோத பைக் ரேஸ்சை மையமாக வைத்து இப்படத்தின் முழு கதையும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வலிமை படக்குழுவினர்கள் முதன்முறையாக க்கிளிம்ஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள் இந்த வீடியோ யூடியூப் தளத்தில் இந்திய அளவில் பல சாதனைகளை முறியடித்து அதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய ஹிட் பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகையுமான வைஷ்ணவி சைதன்யா தல அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த மாதம் வெளியிட்டு அதில் தல அஜித் சாருடன் நடிப்பதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகைப்படத்திற்காக தல ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து வைஷ்ணவி சைதன்யா புடவையில் இருக்கும் புகைப்படங்களையும் அஜித் ரசிகர்கள் மிகவும் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.