ஏ ஆர் ரகுமான் சகோதரியிடம் தனது சித்து விளையாட்டை காட்டிய வைரமுத்து.? உன்மையை வெளிப்படையாக போட்டு உடைத்த பிரபலம்..

0
ar-rahman
ar-rahman

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பத்திரிக்கையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது கூறியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் இந்த படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய நாள் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் பட குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். மணிரத்தினம் ,ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் இதுவரை இடம் பெற்று வந்த கவிஞர் வைரமுத்து இம்முறை புறக்கணிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான காரணம் சின்மயி விவகாரம் தான் என பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அதற்கான காரணத்தை போட்டு உடைத்துள்ளார்.

பயில்வான் கூறியிருப்பதாவது பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை வைரமுத்துவின் வரிகளால் தான் ஏ ஆர் ரகுமானின் இசை எடுபட்டது.மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான், வைரமுத்து ஆகிய மூவரின் கூட்டணி வெற்றி கூட்டணி ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசையமைக்க மணிரத்தினம் அவர்கள் ஏ ஆர் ரகுமானை அணுகியுள்ளார் அப்போது வைரமுத்து இந்த படத்திற்கு பாடல் வரிகள் எழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்க வில்லை வேற யாரையாவது வைத்து இசையமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

இதைக் கேட்ட மணிரத்தினம் மெய் சிலிர்த்து போய் நின்றாராம். அதன் பிறகு ஏ ஆர் ரகுமானை ஏற்றுக்கொண்டு வைரமுத்துவை புறக்கணித்து விட்டார் மணிரத்தினம். ஏற்கனவே சின்மயி சுகாசினியிடம் வைரமுத்துவை பற்றி கூறியுள்ளார். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் வைரமுத்துவை புறக்கணித்ததற்கு காரணம் மீடூ பிரச்சனை தான் என கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமானின் சகோதரி வைரமுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். இந்த காரணத்தால் தான் ஏ ஆர் ரகுமான் வைரமுத்துவை புறக்கணித்ததாக பயில்வான் கூறியுள்ளார்.

இது பற்றி மணிரத்தினம் அவர்களிடம் கேட்டபோது முதலில் எதுவுமே கூறவில்லை அதன் பிறகு மீண்டும் இது பற்றி கேட்டபோது புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளாராம். இதனை ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.