அணுவை விடவும் சிறியது அணுகுண்டை போல் கொடியது!! கொரோனா குறித்து கவிதையை வெளியிட்ட வைரமுத்து.!

இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதே போல் தமிழகத்திலும் படிப்படியாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகிறார்கள், அந்த வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் அனைவரும் அதை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில மக்கள் இதை எதையும் பொருட்படுத்தாமல் வெளியே சென்று சுற்றிதிரிகிறார்கள்.

கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல திரை பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் வீடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், அந்த வகையில் கவியரசர் வைரமுத்து குறளோவியம் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்,.

இந்த கவிதையை பார்த்த எஸ் பி பாலசுப்ரமணியம் அதற்கு மெட்டமைத்து பாடியுள்ளார் இதோ அந்தப் பாடல்.

கரோனா கரோனா கரோனா
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது

சத்தமில்லாமல் நுழைவது
யுத்தமில்லாமல் அழிப்பது
கரோனா கரோனா கரோனா
தொடுதல் வேண்டாம்,
தனிமை கொள்வோம்
தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்

எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
நாளை மீள்வாய் தாயகமே
நாளைய உலகின் நாயகமே
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்

Leave a Comment