இதைவிட அடிமட்டமா என்னால எழுத முடியாதுடா சாமி.! “கட்டிப்புடி கட்டிப்புடிடா” ரகசியத்தை உடைத்த வைரமுத்து.!

Vairamuthu : எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் கடந்த 2000 ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் குஷி இந்த திரைப்படத்தில் விஜய், ஜோதிகா, நிழல்கள் ரவி, விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு தேவாதான் இசையமைத்திருந்தார் பாடல்களை வைரமுத்து அவர்கள் எழுதியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஜோதிகா பேசிய நீ பார்த்தியா அதை நீ பார்த்தியா என்ற வசனம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதிய வைரமுத்து கட்டிப்புடிடா கட்டிப்புடிடா பாடல் உருவானது எப்படி என பேசி உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் வைரமுத்து கூறியதுதான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

வைரமுத்து கூறியதாவது தேவா எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் அவர் ரொம்ப அன்பானவர் அதுமட்டுமில்லாமல் ரொம்பவும் மரியாதை தெரிந்தவர் குஷி திரைப்படத்திற்கு பாடலை எழுதி முடிச்சாச்சு. ஆனால் தேவா ஒரு நாள் என்னை அழைத்தார் ஒரு கமர்சியல் சாங் பண்ண வேண்டும் என கூறினார் நான் உடனே இப்ப எழுதியது எல்லாம் கமர்சியல் சாங் கிடையாதா என கேட்டேன்.

அதற்கு தேவா கட்டிப்புடிடா கட்டிப்புடிடா டம்மியாக இரண்டு லைன் எழுதி இருக்கேன் அந்த வரி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்து விட்டது நீங்க தப்பா நினைக்கலனா அதையே நாங்க வச்சுக்கலாமா என கேட்டார் நானும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம் என கூறினேன் மேலும் பாடலை பாடி காட்டினார் உடனே நான் இது ஓகே அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினேன். இப்படி பேசிவிட்டு காரில் சென்ற பொழுது என்னுடைய உதவியாளர் அந்த வரிகள் மிகவும் அடிமட்டமாக இருக்கிறது எதற்காக ஓகே சொன்னீர்கள் என கேட்டார்.

அதற்கு நான் சொன்னேன் இதை விட அடிமட்டமாக என்னால் வரி எழுத முடியாது அதனால் தான் அதையே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினேன் அதன் பல்லவி முழுவதும் நான் எழுதவே இல்லை என்னுடைய வரிகள் என்று பார்த்தால் “ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே” “கற்பனை இல்லாமல் கட்டிலின் மேல் சேராது” அப்படித்தான் போட்டு இருப்பேன்.

ஒரு பக்கம் புனிதம் ஒரு பக்கம் கொண்டாட்டம் இந்த பக்கம் கேளிக்கை அந்த பக்கம் வேடிக்கை இந்த சமூகத்தில் இதற்கும் ஒரு பங்கு இருக்கு என்பதை நான் புரிந்து கொண்டேன் சில விஷயங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என வைரமுத்து அந்த பேட்டியில் கூறியிருந்தார்.