மாரிசெல்வராஜ் படத்தில் இணைந்த வைகைபுயல் வடிவேலு – கிராமத்தான் லுக்கில் கலக்கல்.

காமெடி என்றால் தாம் நினைவிற்கு முதல் பெயர் வைகை புயல் வடிவேலு தான் அந்த அளவிற்கு பல படங்களில் காமெடியனாக நடித்து வலம் வந்தவர் அதோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் ஹீரோவாகவும் நடித்து உள்ளார். என்னதான் இப்படி வலம் வந்தாலும் இவரது பெயரில் சினிமா உலகில் நிலைத்து நிற்க முக்கிய காரணம்.

இவர் டாப் நடிகர்கள் படங்களில் நடித்தும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித் விஜய் ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் என டாப் நடிகர்கள் படங்களில் நடித்து ஓடியதால் இவரது மார்க்கெட் எதிர்பார்க்காத அளவிற்கு உச்சத்தைத் தொட்டது. சினிமா உலகில் வெற்றியை கண்டு ஓடிய வடிவேலு சில பிரச்சனை காரணமாக கடந்த நான்கு வருடங்களாக நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் லைகா நிறுவனம் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது வடிவேலு தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாகவும், காமெடியனாகவும்  நடித்து வருகிறார். அந்த வகையில் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஒரு வழியாக படத்தின் ஷூட்டிங் முடிந்தது. அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் இணைந்து பஹத் பாசில்,  கீர்த்திசுரேஷ் போன்றவர்களும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது சூட்டிங் பார்ட்டிற்க்கு வந்து வடிவேலுவை..

இயக்குனர் மாரி செல்வராஜ் வரவேற்றார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன அந்த புகைப்படத்தில் வடிவேலு லுங்கி உடன் இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள்.

vadivelu
vadivelu

Leave a Comment