தயாரிப்பாளராக மாறிய வைபவ்.! யார் படத்தை எடுத்துயுள்ளார் தெரியுமா.? அவரே கூறிய சுவாரசியமான பதில்.

சினிமா உலகில்  ஹீரோக்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் நடிகர் வைபவ். அதன்பிறகு படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு ஹீரோவாக என்ட்ரி ஆனார்.

தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் வைபவ்வுக்கு மக்களின் ஆதரவு ஓரளவு இருக்கிறது காரணம் இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தப்பட்டாலும் போட்ட காசை விட ஓரளவு லாபம் பார்க்கும் அளவிற்கு இருந்ததால் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இந்த நிலையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மலேசியா டு அம்னீஷியா.

இந்த படத்தை ராதா மோகன் என்பவர் ஒரு மாறுபட்ட கதை களத்தில் எடுத்துள்ள இந்த படம் வருகின்ற 28 தேதி ஜி5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு நல்லதொரு விருந்து படைத்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதுவரை நடித்திராத கதைக்களம் என்பதால் மக்கள் மன்றம் ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பார்கள் என கூறப்படுகிறது இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில்  வைபவ் கூறியது. இந்த படம் நிச்சயம் பார்ப்பவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கும் பொய் சொல்லி அதிலிருந்து குடும்பத்திடம் இருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறார் என்பதை ஜாலியாக குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் சொல்லி உள்ளோம்.

vaipav
vaipav

இந்த படத்தின் கதையை கேட்டு நான் நடிக்க தான் வந்தேன் ஆனால் தற்போது நிலவும் கொரோனா சூழல் சரியில்லாததால் நடிக்க வந்த நான் படத்தை தயாரிக்க வேண்டிய நிலைக்கு முன் வந்தேன் என கூறினார்.

Leave a Comment